Wikimedia Research/Design Research/Research Participant Program/ta
अन्य भाषाएँ: | Bahasa Indonesia • Deutsch • English • Türkçe • español • français • português • Kiswahili • русский • українська • العربية • فارسی • हिन्दी • বাংলা • தமிழ் • ไทย • 中文 • 日本語 • |
---|
விக்கிமீடியா அறக்கட்டளைக்கான ஆராய்ச்சியில் பங்கேற்றல்
editவிக்கிமீடியா அறக்கட்டளையில், விக்கிபீடியா மற்றும் பிற விக்கிமீடியா செயல்திட்டங்களை இயன்றவரை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு எங்களால் இயன்ற அளவுக்கு பயனுள்ளதாகவும் அணுகக்கூடியதாகவும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தற்போதைய மற்றும் எதிர்காலப் பயனர்களின் தேவைகள் மற்றும் அனுபவங்கள் குறித்த முழுமையான மற்றும் கருத்தூன்றிய ஆராய்ச்சி எங்கள் தயாரிப்பு வடிவமைப்பு இந்த இலக்கை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. இதனால் தான் நாங்கள் எங்கள் ஆராய்ச்சியின் பல்வேறு கண்ணோட்டங்களைச் சார்ந்திருக்கிறோம். சிலருக்கு எங்கள் ஆராய்ச்சியில் பங்கேற்பதில் தடைகள் இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மற்றும் ஆராய்ச்சி செயல்முறையில் இந்த நபர்கள் அளிக்கும் நேரம், முயற்சி மற்றும் உள்நோக்குகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆராய்ச்சிக்கான சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதில், பங்கேற்புக்கான தடைகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் நேரம் மற்றும் இணையத்தள டேட்டாவை ஈடுசெய்யவும், எங்கள் பங்கேற்பாளர்களுக்கு பணக்கொடை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
ஊக்கத்தொகை வழங்கப்படும் ஆராய்ச்சிக்கு தகுதிபெறுதல்
editஆராய்ச்சி பங்கேற்பாளர்கள் எங்கள் விக்கிமீடியா பயனர் தளம் மற்றும் சமூகங்களிலிருந்து நேரடியாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். நாங்கள் பொதுவாக பயனர் செயல்பாடு, பயனர் வகை, தாய்மொழிகள், விக்கி செயல்திட்டத்தில் ஒருவருடைய பங்கு, சமூக உறுப்புரிமை, வாசிக்க அல்லது திருத்த பயன்படுத்தப்படும் சாதனங்கள் போன்ற குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட பயனர்களைத் தேடுகிறோம். ஆய்வுக்கான தகுதி நிபந்தனைகளுக்குப் பொருந்துகின்ற ஆராய்ச்சிப் பங்கேற்பாளரைக் காண பல வழிமுறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். சரியான பங்கேற்பாளர் வகைகளைக் காண, நாங்கள் ஒரு சமூகத் தொடர்பு அலுவலரின் பரிந்துரைகளை கேட்கலாம், திருத்துநர்களை அவர்களுடைய பேச்சு பக்கங்களில் தொடர்புகொள்ளலாம், அல்லது வில்லேஜ் பம்ப் அல்லது ஒத்த பக்கத்தில் ஒரு ஆட்சேர்ப்பு செய்தியை இடுகையிடலாம். குறிப்பிட்ட ஆராய்ச்சி ஆய்வுக்கு பயனர் சிறப்பாகப் பொருந்தக்கூடியவர் என்பதை உறுதிசெய்ய ஒரு ஸ்கிரீனர் கருத்தாய்வை சமர்ப்பிக்குமாறு ஆர்வமுள்ள பயனர்களிடம் நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஸ்கிரீனர் கருத்தாய்விலும் ஆராய்ச்சி அமர்வின்போதும் பங்கேற்பாளர்கள் வழங்குகின்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தவும் சேமிக்கவும் விக்கிமீடியா அறக்கட்டளை எவ்வாறு திட்டமிடுகிறது என்பதைப் பற்றி விளக்கிக் கூறுகின்ற ஒரு தனியுரிமை அறிக்கையையும் நாங்கள் அனுப்புவோம். எங்கள் குழு இந்தக் கருத்தாய்வில் பங்கேற்பது பற்றிய தகவல்களுடன் தகுதிபெற்ற பயனர்களைத் தொடர்புகொள்ளும், இதில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை பற்றிய தகவல்களும் அடங்கும். பங்கேற்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, ஆராய்ச்சி நடவடிக்கைகள் பற்றி விளக்கிக் கூறுகின்ற, மற்றும் அமர்வில் பெறப்பட்ட தரவு மற்றும் உள்நோக்குகளின் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டுக்கு WMF-க்கு அனுமதியளிக்கின்ற ஒரு ஒப்புதல் படிவத்தை பங்கேற்பாளர்கள் கையொப்பமிடுவதற்காக நாங்கள் அனுப்புவோம். ஆராய்ச்சி நடவடிக்கைகள் முடிவுற்ற பிறகு, பங்கேற்பாளர்களுக்கு ஆராய்ச்சிக் குழு பணக்கொடை வழங்கும்.
எங்கள் குழு அடிக்கடி உள்ளூர் ஆர்வக் குழுக்களின் ஆராய்ச்சிப் பங்கேற்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்கிறது. இந்த “மூன்றாம் தரப்பு” ஆராய்ச்சிக் கூட்டாளிகள் மேலே விளக்கிக் கூறப்பட்ட ஆராய்ச்சியின் எந்த நிலையிலும் ஈடுபடுத்தப்படலாம். அவர்கள் அனைவரும் வெளிப்படுத்தாத ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளார்கள், அதாவது அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ள செயல்திட்டத்திற்கு வெளியே பயனர் தகவல்கள் அல்லது தரவை அவர்கள் பகிர்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பது இதன் அர்த்தமாகும். ஆராய்ச்சிக் கூட்டாளிகள் பங்கேற்பாளர்களைத் தொடர்புகொள்ளலாம், ஆராய்ச்சி அமர்வுகளை நடத்தலாம், மற்றும் பணக்கொடைகளையும் அவர்கள் வழங்கலாம்.
ஊக்கத்தொகை வழங்கப்படாத செயல்பாடுகள்
editஆட்சேர்ப்புக் காலத்தின்போது ஆராய்ச்சிக் குழுவால் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்போது மட்டுமே பணக்கொடைகள் அல்லது இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட ஸ்கிரீனர் கருத்தாய்வுக்குப் பின்னரும், அழைப்பு விடுக்கப்பட்ட செயல்பாடுகள் முடிவுற்ற பின்னரும் மட்டுமே பணக்கொடைகளுக்குத் தகுதியுடைய செயல்பாடுகள் தொடங்குகின்றன. மேலே விளக்கிக் கூறப்பட்ட வேறு ஏதாவது உரையாடல்கள் அல்லது செயல்பாடுகளுக்கான பணக்கொடைகள் அல்லது இழப்பீடுகளை நாங்கள் வழங்குவதில்லை. மின்னஞ்சல் அல்லது பேச்சு பக்க பரிமாற்றங்கள், பணக்கொடைகள் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாத கருத்தாய்வுகள், ஆராய்ச்சி அமர்வுக்கு அப்பாற்பட்ட அம்சங்கள் அல்லது நிகழ்ச்சிகள் குறித்த கருத்து அல்லது பின்னூட்டம், ஸ்கிரீனர் கருத்தாய்வுகள் போன்றவை இழப்பீடு வழங்கப்படாத செயல்பாடுகளுக்கு உதாரணங்கள் ஆகும், முதலியவை.
இழப்பீடு ஒதுக்கீடு
editஆராய்ச்சி செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன் பணக்கொடை வழங்குவது பற்றி எங்கள் ஆராய்ச்சிக் குழு பங்கேற்பாளர்களுடன் இணைந்து முடிவுசெய்யும். பணக்கொடையை ஏற்பது கட்டாயமில்லை, பங்கேற்பாளர்கள் விரும்பினால் தங்கள் பணக்கொடையை ஒரு விக்கிமீடியா அத்தியாயத்திற்கு அல்லது இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு அவர்கள் நன்கொடையாக வழங்கலாம்.
பணக்கொடைத் தொகை ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் ஆராய்ச்சித் தேவைகளின் அடிப்படையில் ஆராய்ச்சிக் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. சில செயல்திட்டங்களுக்கு பங்கேற்பாளர்களின் இருப்பிடத்தைக் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் ஒரு நிலையான கட்டணம் வழங்குகிறோம். பிற செயல்திட்டங்களுக்கு, நாங்கள் உள்ளூர் கட்டணம் வழங்குகிறோம். பங்கேற்பாளர்களின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு அடிப்படை வாழ்க்கைச் செலவு விகிதத்தில் இருந்து நாம் தொடங்கலாம். ஆராய்ச்சி அமர்வின் கால அளவு, தேவைப்படுகின்ற ஏதாவது சிறப்புத் திறன்கள், மற்றும் அமர்வின்போது பயன்படுத்தப்படுகின்ற இணையத்தளத் தரவு ஆகியவற்றுக்கு இணங்க இந்த விகிதத்தை நாங்கள் மாற்றியமைக்கிறோம். சாத்தியமுள்ள நேரங்களில், உள்ளூர் தரநிலைகளைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க உதவுவதற்காக பங்கேற்பாளர்கள் வசிக்கும் பிராந்தியத்தில் உள்ள கூட்டாளிகளை நாங்கள் கலந்தாலோசிக்கிறோம்.
இந்த நேரத்தில், பின்வரும் சேவைகள் வாயிலாக மட்டுமே பணக்கொடைகளை நாங்கள் வழங்க முடியும்: Ethn.io, Tremendous.com, மற்றும் Paypal.com. இந்த நிறுவனங்களுக்கான சேவை விதிமுறைகள் அவர்களுடைய வலைத்தளங்களில் இடுகையிடப்பட்டுள்ளன, மற்றும் பணக்கொடையை ஏற்றுக்கொள்வது பங்கேற்பாளர் அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது. இந்த சேவைகளின் வரையறுக்கப்பட்ட உள்ளடக்கப் பரப்பு காரணமாக, உள்ளடக்கப் பரப்பு பிராந்தியங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதிகளுக்கு பணக்கொடைகளை நாங்கள் வழங்க முடியாது, உள்ளடக்கப் பரப்பு இடைவெளிகளை நிரப்ப நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில நேரங்களில், குறிப்பிட்ட நாடுகளில் Paypal சேவை மட்டுமே செயல்படக்கூடியதாக இருக்கலாம். அவ்வாறான நிகழ்வுகளில், பங்கேற்பாளர்கள் Paypal வாயிலாக மட்டுமே கட்டணங்களைப் பெற முடியும், இதற்கு ஒரு Paypal கணக்கு தேவைப்படும்.
பங்கேற்கவும்
editநீங்கள் எங்கள் ஆராய்ச்சிப் பங்கேற்பாளர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், தயவுசெய்து இங்கே பதிவு செய்யவும். எங்கள் ஆராய்ச்சித் திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளுடன் நீங்கள் அவ்வப்போது தொடர்புகொள்ளப்படலாம். தயவுசெய்து எங்கள் அறிக்கையை பார்க்கவும். இந்தப் படிவத்தைசமர்ப்பிப்பதன் மூலம் பங்கேற்பாளர்களின் குழுவிலிருந்து நீங்கள் எந்த நேரத்திலும் விலகிக்கொள்ளலாம்.
தொடர்புகொள்க
editஎங்கள் ஆராய்ச்சி ஊக்கத்தொகைகள் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து தொடர்புகொள்ளவும் desresadmin@wikimedia.org.