என் பெயர் கலீல் ஜாகீர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சொந்த ஊராகக் கொண்ட நான், மயிலம் பொறியியல் கல்லூரியில் எனது இளங்கலை கணினி பொறியியல் படிப்பை முடித்து, இரண்டு ஆண்டுகள் புதுசேரியில் பணிபுரிந்து, தற்பொழுது சென்னையில் பணிபுரிந்து வருகின்றேன். கல்லூரியில் படிக்கும்போதே கட்டற்ற மென்பொருள் என்பதை கேள்விப்பட்டு அதன்மூலம் விழுப்புரம் லினக்ஸ் பயனர்குழுவில் இணைந்து இன்று வரை என்னால் முடிந்த அனைத்து தளங்களிலும் தமிழ் மொழிக்காகப் பங்களித்து வருகின்றேன்.